உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் நுபுர் ஷியோரன் அரையிறுதிக்கு முன்னேறினார்.
உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், பெண்களுக்கான 80+ கிலோ எடைப் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் நுபுர் ஷியோரன், உஸ்பெகிஸ்தானின் சோடிம்போயவா ஆல்டினாயை ,நுபுர் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து உலகசாம்பியன் ஷிப்பில் இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.
இந்திய வீரர் ஜடுமானி, 'ரவுண்டு-16' போட்டியில் பிரிட்டனின் ரீஸ் ரெட் ஷாவை ஜடுமானி 5-0 என்ற கணக்கில் ஒரு மனதாக வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்திய வீராங்கனை மீனாட்ஷி 48 கிலோ எடைப்பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் ,5-0 என சீனாவின் வாங் குயு பிங்கை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
0
Leave a Reply